ஆட்டுக்கறி - உருளைக்கிழங்கு வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி (எலும்பில்லாத தனிக்கறி) - 1/2 கிலோ
2. உருளைக் கிழங்கு - 150 கிராம்
3. வெங்காயம் - 3 எண்ணம்
4. தக்காளி - 4 எண்ணம்
5. சோம்பு - 1/2 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. மட்டன் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
10. கருவேப்பிலை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. எலும்பில்லாத ஆட்டுக்கறியை நன்கு கழுவி மஞ்சள் தூளைச் சிறிது சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
2. உருளைக் கிழங்கும் தக்காளியை வேகவைத்துத் தோலுரித்து கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
4. இத்துடன் சேர்த்து வேகவைத்த தக்காளி, உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழஙு ஒன்று சேர்ந்ததும் வேகவைத்த ஆட் டுகறியைச் சேர்க்கவும்.
6. மிளகாய்த்தூள், மட்டன் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
7. நன்கு வதங்கிய பின்பு கருவேப்பிலையை மேலாகத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.