தலைக்கறி பிரட்டல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தலைக்கறி - 1/2 கிலோ
2. வெங்காயம் - 150 கிராம்
3. பல்லாரி வெங்காயம் - 1 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
5. மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
6. மிளகுத்தூள் - 3 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
8. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
9. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
10. பட்டை - சிறிது
11. சோம்பு - 20 கிராம்
12. கிராம்பு - 2 எண்ணம்
13. மல்லித்தழை - சிறிது
14. எண்ணெய் - தேவையான அளவு
15. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. தலைக்கறியைச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. சுத்தம் செய்த தலைக்கறியுடன் இஞ்சிப் பூண்டு விழுது 1 தேக்கரண்டி சேர்த்துச் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிப் பட்டை, சோம்பு, கிராம்பு போட்டுத் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
4. மீதியுள்ள இஞ்சிப் பூண்டு விழுது, மஞ்சள்தூள் ,கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
5. இத்துடன் வேக வைத்த தலைக்கறியைக் கொட்டி நன்கு வதக்கவும்.
6. தண்ணீர் வற்றி மசாலா கெட்டியானதும் மிளகுத்தூள்,உப்பு சேர்த்து சில நிமிடம் கிண்டி மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.