பாசிப்பருப்பு பாயாசம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு - 100 கிராம்
2. வெல்லம் - 250 கிராம்
3. தேங்காய் - சிறியது
4. ஏலக்காய், முந்திரிப் பருப்பு - தேவையான அளவு
5. நெய் - 3 மேஜைக் கரண்டி
செய்முறை:
1.பாசிப்பருப்பை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
2. இந்தப் பாசிப்பருப்பை 600 மில்லி லிட்டர் தண்ணீரில் நன்றாக குழையும்படி வேக வைக்கவும்.(தேவையெனில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்)
3. இதனுடன் தூளாக்கப்பட்ட வெல்லம், தேங்காய்ப்பூ, நெய், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் சேர்த்து வேக வைக்கவும்.
4. நன்றாகப் பக்குவமாக வந்ததும் இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.