உளுந்தம் பால்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பால் - 300 மி.லி
2. உளுந்து - 50 கிராம்
3. முட்டை - 1 எண்ணம்
4. சர்க்கரை - தேவையான அளவு
5. நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
2. பால் கொத்தித்தவுடன் சிம்மில் வைத்து, முட்டையை அடித்துக் கொடி போல் ஊற்றவும், கிளறக்கூடாது.
3. இதனுடன் மசித்த வேகவைத்த உளுந்தைச் சேர்க்கவும். பின் தேவைக்குச் சர்க்கரை சேர்க்கவும்.
4. அடியில் பால் உறையாமல் காய்ச்சி எடுக்கவும்.
5. கெட்டியாக இருந்தால் கொஞ்சம் சுடு நீர் சேர்க்கலாம்.
6. பின்பு ஒரு ஸ்பூன் நெய் விடவும்.
7. உளுந்தம்பால் தயார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.