உருளைப் பாயாசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
2. சர்க்கரை - 200 கிராம்
3. மில்க்மெயிட் - 4 மேசைக்கரண்டி
4. நெய் - 4 தேக்கரண்டி
5. பால் - 1/2 லிட்டர்
6. ஏலக்காய் - 1 எண்ணம் (பொடித்தது)
7. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
8. உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - 10 எண்ணம்
செய்முறை:
1. உருளைக் கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மெலிதாகக் கேரட் சீவியால் சீவிக் கொள்ளவும் .
2. ஒரு வானலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி, உருளைச் சீவலை பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும்.
3. காய்ச்சிய பாலை சர்க்கரை சேர்த்து விட்டு, வதக்கிக் கொண்டிருக்கும் உருளைச் சீவலுடன் சேர்க்க வேண்டும்.
4. பாலும், உருளைச் சீவலும் சேர்ந்து வரும்வரை விடாமல் கிளற வேண்டும்.
5. பின்பு சர்க்கரை, மில்க் மெயிட் சேர்க்க வேண்டும்.
6. மீதி நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலத்தூள் சேர்த்து சிறு கிண்ணங்களில் ஊற்றிப் பறிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.