அரிசி பாயாசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பாஸ்மதி அரிசி - 1/4 கப்
2. பால் - 4 கப்
3. நெய் - 1/4 கப்
4. சீனி - 3/4 கப்
5. முந்திரிப்பருப்பு - 1/4 கப்
6. காய்ந்த திராட்சை - 10 எண்ணம்
7. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை இரண்டையும் வறுத்துத் தனியே வைக்கவும்.
2. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
3. அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
4. கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியைச் சேர்க்கவும். அடுப்பை குறைந்த நெருப்பில் வைத்து இடையிடையேக் கிளறி விடவும்.
5. அரிசி நன்கு வெந்து பால் பாதியாகக் குறைந்ததும் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்கி ஐந்து நிமிடங்கள் வரைக் கொதிக்க விடவும்.
6. கடைசியாக, நெய், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.