நுங்கு பாயாசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நுங்கு – 10 எண்ணம்
2. பால் – 3 கப்
3. ஏலக்காய் – 3 எண்ணம்
4. சர்க்கரை – 1 கப்
செய்முறை:
1. நுங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.
2. ஆறு நுங்குகளை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். நான்கு நுங்கைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. சர்க்கரையுடன் ஏலக்காயைச் சேர்த்து நன்கு மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
4. பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும்.
5. நன்கு ஆறிய பாலில் அரைத்த, பொடியாக நறுக்கிய நுங்கு, ஏலக்காய் கலந்த சர்க்கரை, பால் என அனைத்தையும் ஒன்றாகப் பாயசம் பதத்திற்குக் கலக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.