பேரீச்சம் பழ பாயாசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பேரீச்சம் பழம் - 25 எண்ணம்
2. பால் - 2 1/2 கப்
3. முந்திரிப் பருப்பு - 5 எண்ணம்
4. பாதாம் பருப்பு - 5 எண்ணம்
5. நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. பேரீச்சம் பழத்தை கழுவி ½ கப் பாலில் ஊற வைக்கவும்.
2. அரை மணி நேரத்திற்கு பிறகு பழத்தை ஊற வைத்த பாலை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
3. அதே நேரத்தில் 2 கப் பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, பாதியாகச் சுண்டும் அளவிற்கு காய்ச்சிக் கொள்ளவும்.
4. பால் சேர்த்து அரைத்த பேரிச்சைக் கலவையை காய்ந்து கொண்டிருக்கும் பாலில் ஊற்றி லேசாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.
5. வாணலியில் 1 தேக்கரண்டி நெய் விட்டுக் காய்ந்ததும், முந்திரி, பாதாம் அல்லது தேங்காய் சீவல்களை சிவக்க வறுத்து பாலில் சேர்க்கவும்.
குறிப்பு:
இந்த பாயசத்திற்கு பேரீச்சம் பழத்திலிருக்கும் இனிப்பே போதுமானது. சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை. கூடுதல் இனிப்பு தேவைப்படுபவர்கள் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.