மாம்பழப் பாயாசம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மாம்பழ விழுது – 1 கப்
2. மாம்பழத் துண்டுகள் – ½ கப்
3. சர்க்கரை – ½ கப்
4. பால் – 1 லிட்டர்
5. நெய் – சிறிதளவு
6. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
7. உலர் திராட்சை - 6 எண்ணம்
8. பாதாம் பருப்பு - 4 எண்ணம்
9. பிஸ்தா பருப்பு – 4 எண்ணம்
10. ஏலக்காய்த் தூள் – ¼ ஸ்பூன்
செய்முறை:
1. ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பு, உலர்திராட்சையைச் சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும்.
2. அதே வாணலியில் 1 லிட்டர் பாலைச் சேர்த்து நன்கு காய்ச்சவும்.
3. வேறு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் சேர்த்து, அதில் மாம்பழ விழுதினைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
4. பால் நன்கு காய்ந்ததும், நெய்யில் வதக்கிய மாம்பழ விழுதினைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
5. பின்னர் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.
6. சர்க்கரை கரைந்து பாயாசம் கெட்டியானதும், வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, பாதாம் , பிஸ்தா சேர்த்துக் கொள்ளவும்.
7. பின் ஏலக்காய் தூள் மற்றும் சிறிதளவு மாம்பழ துண்டுகளைச் சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.