பாஸ்தா பாயாசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பாஸ்தா அல்லது மக்ரோனி - 3/4 கப்
2. பால் - 2 கப்
3. வெல்லப்பாகு - 1/2 கப்
4. ஏலக்காய் - 2 எண்ணம்
5. நெய் - 1 மேசைக்கரண்டி
6. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
7. உலர் திராட்சை - 6 எண்ணம்
8. பச்சரிசி மாவு (வறுத்தது) - 1 1/2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. அடி கனமான அகன்ற பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
2. கொதிக்கும் நீரில் பாஸ்தாவைச் சேர்த்து 3 நிமிடங்கள் வரை வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
3. மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பு, உலர் திராட்டை இரண்டையும் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
4. வறுத்த முந்திரி, உலர் திராட்டைகளை வடிகட்டி எடுத்துவிட்டு அந்தப் பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.
5. பால் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேகவைத்த பாஸ்தாவைச் சேர்க்கவும்.
6. பால் சுண்ட ஆரம்பிக்கும் வேளையில் அரிசி மாவைக் கட்டியில்லாமல் கரைத்துப் பாலில் சேர்த்துக் கிளறவும்.
7. கலவை நன்றாகக் கொதித்து வரும் போது நசுக்கிய ஏலக்காயை சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி வெல்லப்பாகை சேர்த்துக் கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.