ஜவ்வரிசி பாயாசம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ஜவ்வரிசி - 200 கிராம்
2. வெல்லம் - 250 கிராம்
3. தேங்காய் - ஒன்று
4. முந்திரிப்பருப்பு - 25 கிராம்
5. கிஸ்மிஸ் பழம் - 25 கிராம்
6. ஏலக்காய் - 10 கிராம்
செய்முறை:
1.ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சுட வைக்கவும். நன்றாகச் சுடவும் ஜவ்வரிசியைப் போட்டுக் கிளறவும்.
2. ஜவ்வரிசி வெந்ததும் தூள் செய்த வெல்லம் சேர்த்துக் கிளறவும்.
3. பாயாசம் பாகு வாசனை வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறவும்.
4. நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் ஏலக்காய் போன்றவைகளைப் போட்டு லேசாக வறுத்து பாயாசத்துடன் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.