அவல் பாயாசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அவல் - 1 கிண்ணம்
2. பால் - 3/4 கிண்ணம்
3. பால் - 3/4 கிண்ணம்
4. ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
6. உலர் திராட்சை - 10 எண்ணம்
7. நெய் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. அவலை 10 நிமிடம் ஊற வைத்துக் கழுவி நீரை வடிகட்டவும்.
2. பின் அவலுடன் பால் சேர்த்து வேகவிடவும்.
3. வெந்ததும் பாலை ஊற்றிச் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
4. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பு, உலர் திராட்சையைப் போட்டு வதக்கவும்.
5. வதக்கிய முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய்த் தூளினைப் பாயாசத்துடன் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.