திணையரிசிப் பாயாசம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. திணை அரிசி - 150 கிராம்
2. பால் - 100 மில்லி
3. ஏலக்காய் - 3 எண்ணம்
4. வெல்லம் - 100 கிராம்
5. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
6. உலர் திராட்சை - 10 எண்ணம்
7. நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
1. திணை அரிசியை நன்கு வேக விடவும்.
2. வெல்லத்தைப் பாகு காய்ச்சி வடித்து வைக்கவும்.
3. வெல்லப் பாகை திணை அரிசி வெந்த பின்பு சேர்க்கவும்.
4. ஏலக்காயைப் பொடித்துச் சேர்க்கவும்.
5. பாலை நன்கு காய்ச்சி, திணை அரிசி சூடு தணிந்த பின் சேர்க்கவும்.
6. நெய்யில் முந்திரிப்பருப்பு திராட்சை போன்றவற்றை வறுத்து சேர்த்து கலந்து விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.