சேமியா பாயசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சேமியா – 100கிராம்
2. சவ்வரிசி – 50 கிராம்
3. காய்ச்சிய பால் – 150 மி.லி
4. சர்க்கரை - 250 கிராம்
5. உப்பு – 1 சிட்டிகை
6. ஏலப்பொடி – 1/2 தேக்கரண்டி
7. நெய் - 1 தேக்கரண்டி
8. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
9. உலர் திராட்சை - 10 எண்ணம்
செய்முறை:
1. முதலில் சவ்வரிசியை வறுத்து நீர் சேர்த்து வேக விடவும்.
2. நன்றாக வெந்ததும் சேமியாவைச் சேர்க்கவும், சேமியா வெந்ததும், சர்க்கரை, காய்ச்சிய பால், உப்பு, ஏலப்பொடி,நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.