காளான் பிரியாணி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் – 1/2 கிலோ
2. பாசுமதி அரிசி – 300 கிராம்
3. வெங்காயம் – 1 எண்ணம்
4. தக்காளி – 2 எண்ணம்
5. இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
6. மல்லித்தழை – 25 கிராம்
7. மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
8. மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
9. சோம்புத் தூள் – 1/2 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
11. புதினா – சிறிது
12. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
13. எண்ணெய் – 3 தேக்கரண்டி
14. நெய் – 3 தேக்கரண்டி
15. தேங்காய் பால் – 1/2 கிண்ணம்
16. பிரியாணி இலை – 1எண்ணம்
17. ஏலக்காய் – 3 எண்ணம்
18. இலவங்கம் – 2 எண்ணம்
19. கிராம்பு – 5 எண்ணம்
20. தயிர் – 2 மேசைக்கரண்டி
21. உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் காளானை இலேசான சுடுநீரில் கழுவிச் சுத்தம் செய்து, அதனை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
2. பாசுமதி அரிசியை நீரில் ஊற வைக்க வேண்டும்.
3. வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மல்லித்தழை, புதினா ஆகியவற்றைச் சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
4. வாணலியில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றை போட்டுத் தாளிக்க வேண்டும்.
5. அதில் நறுக்கியவெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
6. அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்க வேண்டும்.
7. பின் இஞ்சிப் பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
8. தக்காளி நன்கு வதங்கியதும், காளானைப் போட்டுப் பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், சோம்புத் தூள், தயிர், தேங்காய்ப் பால் மற்றும் உப்பு சேர்த்துக் குழம்பு போல் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
9. ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி போடவும்.
10. அரிசியுடன் தயார் செய்து வைத்துள்ள குழம்பினை ஊற்றித் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.
11. நன்றாக வெந்ததும் இறக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.