சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 300 கிராம்
2. வெல்லம் - 300 கிராம்
3. தேங்காய்த் துருவல் - 3/4 கப்
4. நெய் - 100 மி.லி
5. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
6. முந்திரிப்பருப்பு - 12 எண்ணம்
7. உலர்திராட்சை - 10 எண்ணம்
செய்முறை :
1. பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, உலர் திராட்சை, தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
3. வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும்.
4. குக்கரில் ஊற வைத்த அரிசியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி 5 விசில்விட்டு இறக்கவும்.
5. குக்கரில் ஆவி அடங்கிய பின்னர் மூடியைத் திறந்து சாதத்தை நன்கு மசிக்கவும்.
6. அதனுடன் வெல்லக்கரைசல் சேர்த்துச் சூடாக்கிக் கிளறவும்.
7. பின்னர் அதில் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.