காரப்பொங்கல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 கப்
2. பாசிப்பருப்பு - 1/2 கப்
3. முந்திரிப்பருப்பு - 5 எண்ணம்
4 பாதாம் பருப்பு - 5 எண்ணம்
5. தேங்காய் - 1/2 மூடி
6. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
7. மிளகு - 1 தேக்கரண்டி
8. சீரகம் - 1 தேக்கரண்டி
9. நெய் - தேவையான அளவு
10. கறிவேப்பில்லை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
12. இஞ்சி - சிறிய துண்டு
13. மஞ்சள் தூள் - சிறிது
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பைச் சேர்த்து இலேசாக வறுத்து எடுத்து, அதனைச் சாதாரண தண்ணீரில் நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.
2. ஒரு குக்கரில் சிறிது நெய் ஊற்றி, அதில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
3. பின்னர் அதனுடன் கழுவி வைத்திருந்த அரிசி மற்றும் பருப்பைச் சேர்த்துக் கொள்ளவும்.
4. அதனுடன் தண்ணீர் சேர்த்து சிறிதளவு மஞ்சள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி விடவும், கடைசியாகச் சிறிது நெய் சேர்க்கவும்.
5. குக்கரி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
6. ஒரு வாணலியில், நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, மிளகு, சீரகம் சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதாக நறுக்கிய தேங்காய் சேர்த்துத் தாளிக்கவும்.
7. குக்கரில் வேக வைத்த பொங்கலுடன் தாளிசத்தைச் சேர்த்துநன்றாகக் கிளறி விடவும்.
குறிப்பு:
காரப் பொங்கலுக்குப் பாசிப்பருப்பு சாம்பார் சேர்த்துச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.