பூண்டு சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வடித்த சாதம் - 2 கப்
2. மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
3. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. சின்ன வெங்காயம் - 1/2 கப்
8. பூண்டு - 1 கப்
9. இஞ்சி - 1 துண்டு
10. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
11. நெய் - 2 மேசைக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
13. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
1. வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றின் தோலை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. நெய்யில் கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
3. அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
5. இந்த பூண்டுக் கலவையில் சாதத்தைச் சேர்த்து, தேவையெனில் உப்பு தூவிக் கிளறிப் பின்னர் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.