கேரட் சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வடித்த சாதம் - 2 கப்
2. கேரட் (பெரியது) - 2 எண்ணம்
3. பூண்டு - 4 பல்
4. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
5. எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை :
1. கேரட்டை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிக்கொள்ளவும். அல்லது பெரியதாய் துருவிக் கொள்ளவும்.
2. வாணலி நன்கு காய்ந்த பின் அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பூண்டு போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்துப் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
3. பின் கேரட்டை சேர்த்துக் கிளறி, அதில் சாதத்தைச் சேர்த்து மீண்டும் ஒரு கிளறு மட்டும் கிளறி இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.