வரகு அரிசி காய்கறிச் சாதம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வரகு அரிசி - 2 கப்
2. காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - 1 கப்
3. பெரிய வெங்காயம் - 3 எண்ணம்
4. தக்காளி - 3 எண்ணம்
5. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
6. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
7. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
8. பட்டை - சிறு துண்டு
9. இலவங்கம் - சிறிது
10. ஏலக்காய் - 2 எண்ணம்
11. புதினாத்தழை - சிறிது
12. மல்லித்தழை - சிறிது
13. தயிர் - 1/2 கப்
14. நெய் - 1 மேசைக்கரண்டி
15. எண்ணெய் - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. காய்கறிகள், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. மல்லி, புதினாத்தழையினை நறுக்கி வைக்கவும்.
3. வரகு அரிசியை நன்றாகக் கழுவி வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
5. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
6. அடுத்து தக்காளி, காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்.
7. தக்காளி மற்றும் காய்கறிகள் சற்று வதங்கியதும் தயிர், மிளகாய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
8. பின்னர் அதில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
9. நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன் வரகு அரிசியைச் சேர்த்துக் கிளறி மூடி வையுங்கள்.
10. அரிசி வெந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.