சேமியா வெண் பொங்கல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சேமியா - 2 கப்
2.. பாசிப்பருப்பு - 2 கப்
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. இஞ்சி - சிறிது
6. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
7. கறிவேப்பிலை - சிறிது
8. பெருங்காயத்தூள் - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
10. நெய் - தேவையான அளவு
செய்முறை :
1. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், சேமியாவைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பயத்தம் பருப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி பருப்பை முக்கால் பதம் வேக வைக்கவும்.
3. பிறகு, அதனுடன் வறுத்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.
4. அத்துடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
5. ஒரு வாணலியில் நெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
6. வறுத்தவற்றை சேமியாவில் சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.