முட்டைக்கோஸ் பிரியாணி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி - 250 கிராம்
2. முட்டைக்கோஸ் - 250 கிராம்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. தயிர் - 3 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
6. இஞ்சி - சிறிதளவு
7. பூண்டு - பாதி
8. பட்டை, கிராம்பு- தேவையான அளவு
9. ஏலக்காய் - 5 எண்ணம்
10. தேங்காய்ப் பால் - 1/2 கப்
11. மல்லித்தழை - கைப்பிடி அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
13. நெய் - 2 தேக்கரண்டி
14. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. முதலில், அரிசியை ஊற வைத்துக் கழுவி எடுத்து வைக்கவும்.
2. வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
3. இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
4. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் கொஞ்சம் சிறிதளவு நெய் ஊற்றி, பின்னர் காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
5. வெங்காயம், லேசாக வெந்த பின்னர், முட்டைக்கோஸைப் போட்டு வதக்கவும்.
6. பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும்.
7. அதில் தேவையான அளவு உப்பு, தயிர், தேங்காய்ப் பால் சேர்த்து வதக்கவும்.
8. அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதித்து வந்ததும், ஊறவைத்த அரிசியைக் கொட்டிக் கிளறவும்.
9. பின்னர் பாத்திரத்தை மூடி பாதி வெந்ததும் திறந்து கிளறி மீண்டும் மூடி வெந்ததும், இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.