ரவை பொங்கல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 200 கிராம்
2. பாசிப்பருப்பு - 100 கிராம்
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. நெய் - 50 கிராம்
6. முந்திரிப் பருப்பு - 25 கிராம்
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. பாசிப்பருப்பை வறுத்துத் தேவையான தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
2. வாணலியைக் காய வைத்து, அதில் ரவையைப் போட்டு இலேசாக வறுக்கவும்.
3. வறுத்த ரவையை, வேக வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்துக் கலக்கவும்.
4. இலேசான சூட்டில் இரண்டையும் கெட்டிப்படாமல் மசிக்கவும்.
5. சிறிது நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு போட்டு வறுக்கவும்.
6. வறுத்தவைகளை ரவை, பாசிப்பருப்புடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.