பட்டாணி புலாவ்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 1 கப்
2. பச்சை பட்டாணி - 1/2 கப்
3. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
4. வெங்காயம் - 1 எண்ணம்
5. பட்டை - 1/2 துண்டு
6. பிரிஞ்சி இலை - 1 எண்ணம்
7. கிராம்பு - 4 எண்ணம்
8. சீரகம் - 1 தேக்கரண்டி
9. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
10. தேங்காய் பால் - 1/2 கப்
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. பச்சை பட்டாணியை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும் .
3. பச்சை மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
4. குக்கரை மிதமான தீயில் வைத்து 1 மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
5. பின்னர் அதில், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
6. வெங்காயம் வதங்கியதும், ஊற வைத்த பட்டாணியைச் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
7. பின்னர், ஊற வைத்த அரிசியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
8. அரிசி வதங்கியதும் 1 1/2 கப் தண்ணீர், 1/2 கப் தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி குக்கரை மூடி போட்டு 2 விசில் வரை வேகவிடவும்.
குறிப்பு
பட்டாணி புலாவிற்கு பன்னீர் பட்டர் மசாலா சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.