குதிரைவாலி அரிசி தயிர்ச் சாதம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. குதிரைவாலி அரிசி - 1/2 கிலோ
2. பால் - 1 கப்
3. தயிர் -1/2 கப்
4. கடுகு -1 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
6. மாதுளை விதைகள் - சிறிது
7. இஞ்சி - சிறிய துண்டு
8. உப்பு -தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிது
10. மல்லித்தழை - சிறிது
செய்முறை :
1. குதிரைவாலி அரிசியைச் சுத்தம் செய்து மூன்று கப் தண்ணீர் சேர்த்து, நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
2. வேக வைத்த சோற்றை நன்கு ஆற வைக்கவும்.
3. ஆற வைத்த சோறுடன் பால் சேர்த்துக் கிளறவும்.
4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, காய்ந்த மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்துப் பொரித்து எடுக்கவும்.
5. பின் அதைத் தயிருடன் சேர்த்து, பால் ஊற்றிச் சாதத்தில் போட்டு நன்றாகக் கலக்கி உப்பு சேர்க்கவும்.
6. இறுதியாக மல்லித்தழை, மாதுளை சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு:
* பிற அரிசியில் செய்யப்படும் தயிர் சாதங்களை விட மிகச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.