வெண் பொங்கல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அரிசி – 250 கிராம்
2. பாசிப்பருப்பு – 100 கிராம்
3. மிளகு – 20 எண்ணம்
4. இஞ்சி – ஒரு சிறிய துண்டு
5. சீரகம் – 2 தேக்கரண்டி
6. நெய் – 100 மி.லி
7. பெருங்காயத்தூள் - சிறிது
8. முந்திரிப்பருப்பு – 10 எண்ணம்
9. கிஸ்மிஸ் பழம் - 10 எண்ணம்
10. உப்பு – தேவையான அளவு
11. கருவேப்பிலை - சிறிது.
செய்முறை :
1. அரிசி மற்றும் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக சூடு வரும் வரை வறுத்து வைக்கவும்.
2. இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. மிளகு, சீரகத்தை இலேசாகப் பொடித்து வைக்கவும்.
4. அரிசி, பருப்பைக் களைந்து, ஒரு பங்குக்கு நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவைத்துத் தனியாக வைக்கவும்.
5. வாணலியில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழத்தைச் சிறிது நெய் விட்டுத் தனியாக வறுத்து வைக்கவும்.
6. வாணலியில் நெய் விட்டுப் பொடித்த மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
7. வேக வைத்திருக்கும் சாதத்துடன் எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து நெய் விட்டு நன்கு கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.