நெய்ச் சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 200 கிராம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. மிளகாய் - 2 எண்ணம்
4. கிராம்பு - 2 எண்ணம்
5. சோம்பு - சிறிது
6. பிரியாணி இலை - 1 எண்ணம்
7. ஏலக்காய் - 1 எண்ணம்
8. பட்டை - 1 துண்டு
9. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
10. உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - 8 எண்ணம்
9. நெய் - 2 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. அரிசியை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்துப் பின்னர் நன்றாக கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், அதில் கிராம்பு, பட்டை, சோம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காயைச் சேர்த்து வறுக்கவும்.
3. வறுத்தவற்றுடன் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
4. மிதமான வெப்பத்தில் ஊற வைத்த அரிசியை வதக்கியவைகளுடன் சேர்த்து வறுக்கவும். அரிசி நன்கு காய்ந்து, பளபளப்பாக மாறும் வரை வறுக்கவும்.
5. அத்துடன் 600 மி.லி. வெந்நீர் ஊற்றிக் கொதிக்க விடவும். கொதித்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடியால் மூடி வைக்கவும்.
6. சுமார் 15 நிமிடங்கள் வெந்த பின்பு இறக்கி வைக்கவும்.
7. கடைசியாக ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் போட்டு வதக்கவும்.
8. இறக்கி வைத்த நெய் சாதத்துடன் வதக்கிய முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவைகளைப் போட்டுக் கிளறி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.