கீரைச் சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முளைக்கீரை - 1 கட்டு
2. அரிசி - 1 கப்
3. துவரம்பருப்பு -1 /2 கப்
4. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
5. மிளகாய் - 2 எண்ணம்
6. சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
7. பூண்டு - 2 பற்கள்
8. கடுகு - 1 தேக்கரண்டி
9. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
10. எண்ணெய் - தேவையான அளவு
11. நெய் - 2 தேக்கரண்டி
12. மஞ்சள் தூள் - சிறிது.
செய்முறை :
1. கீரையை நன்கு அலசிப் பொடியாக நறுக்கவும்.
2. அரிசி, பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு பொரிந்ததும் கீரை, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. அத்துடன் ஊற வாய்த்த அரிசி, பருப்பு, சாம்பார்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
5. பின்னர் அதில் ஒரு கப் அரிசிக்கு 1 1 /2 கப் எனும் அளவில் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
6. தண்ணீர் வற்றிய பின்பு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.