வெஜிடபிள் புலாவ்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. புதினா – 2 கட்டு
2. புலாவ் அரிசி – 1/2 கிலோ
3. தேங்காய் – 1 மூடி
4. பெரிய வெங்காயம் – 4 எண்ணம்
5. கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிப்ளவர், பச்சைப்பட்டாணி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் போன்ற காய்கறிகள் - தேவையான அளவு.
6. வெண்ணெய் - 2 தேக்கரண்டி
7. ஏலக்காய்- 4 எண்ணம்
8. பட்டை - 1 துண்டு
9. கிராம்பு - 4 எண்ணம்
10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. புதினா இலைகளைத் தனியாக எடுத்துச் சுத்தம் செய்து கொள்ளவும்.
2. காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. இஞ்சிப் பூண்டை இடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புதினா ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் வெண்ணைய் போட்டுக் காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
5. அதனுடன் 2 கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
6. அதனுடன் அரைத்து வைத்துள்ள புதினாவை போட்டு வதக்கி அதனுடன் காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள்சேர்த்து நீர் ஊற்றி வேகவிடவும்.
7. இந்தக் கலவை கொதித்ததும் அரிசியைப் போட்டு வெந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.