புளிச்சாதம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கெட்டியாகக் கரைத்த புளி - 1 கப்
2. நல்லெண்ணெய் - 1/2 கப்
3. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
4. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - சிறிது
8. சாதம் (வடித்தது) - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
10. வெந்தயம் - 1 தேக்கரண்டி
11. மல்லி - 1/4 கப்
12. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்.
செய்முறை :
1. ஒரு வாணலியில் வெந்தயத்தைப் போட்டு சிவக்க வறுத்துத் தனியாக வைக்கவும்.
2. அதே வாணலியில் மல்லி, மிளகாய் வற்றலை வறுத்துத் தனியாக வைக்கவும்.
3. வறுத்து வைத்த மிளகாய் வற்றல், மல்லி, வெந்தயம் ஆகியவற்றை மெலிதாகப் பொடிக்கவும்.
4. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு, புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
6. அதனுடன் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
7. எண்ணெய் பிரிந்து வரும் போது, பொடித்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
8. இதை வடித்த சாதத்துடன் சேர்த்துக் கிளறிச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.