நெய் சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி - 1 கப்
2. நெய் - 2 மேசைகரண்டி
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
5. பச்சைமிளகாய் - 1 எண்ணம்
6. முந்திரி - 7 எண்ணம்
7. உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - 7 எண்ணம்
8. பட்டை - 1 துண்டு
9. பிரியாணி இலை - 1 எண்ணம்
10. கிராம்பு - 3 எண்ணம்
11. ஏலக்காய் - 3 எண்ணம்
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. பாசுமதி அரிசியை தண்ணீர் ஊற்றிக் கழுவி, பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
2. பின் தண்ணீரை நன்றாக வடித்து, ஒரு வாணலியில் சிறிது நெய்விட்டு அரிசியை இலேசாக வதக்கி எடுத்து வைக்கவும்.
3. வெங்காயம், பச்சைமிளகாய்யை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும்.
5. அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
6. அத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
7. பின் அதில் வதக்கி வைத்த அரிசி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
8. சாதம் வெந்த பின்பு அதை இறக்கி வைக்கவும்.
9. வாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும் அதில், முந்திரி, உலர் திராட்சையைப் போட்டு இலேசாக வறுத்து வேக வைத்த சாதத்தின் மேல் போட்டுப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.