அவல் பொங்கல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அவல் – 1 கப்
2. தேங்காய்த் துருவல் – 1/2 கப்
3. வெல்லத் துருவல் – 1/4 கப்
4. பேரீச்சை – 1/4 கப் (நறுக்கியது)
5. ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை
6. உலர் திராட்சை – 10 எண்ணம்
7. செர்ரி பழம் – 5 எண்ணம்.
செய்முறை :
1. செர்ரிப் பழம் அனைத்தையும் நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அவலைத் தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து, நீர் தெளித்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
3. இதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லத்துருவல், பொடியாக நறுக்கிய பேரீச்சை, செர்ரி பழம், காய்ந்த திராட்சை சேர்த்துக் கலக்கவும்.
4. பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.