பால் பொங்கல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 250 கிராம்
2. பால் - 1 லிட்டர்
3. சர்க்கரை - 500 கிராம்
4. வறுத்த முந்திரிப் பருப்பு - 20 எண்ணம்
5. குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
6. நெய் - 100 மில்லி
7. ஏலக்காய்த்தூள் - சிறிது.
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் அரிசியுடன் பாலைக் கலந்து வேக வைக்கவும்.
2. அதனுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துக் கிளறிவிடவும்.
3. கடைசியாக நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.