ப்ரைடு ரைஸ்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அரிசி – 2 கப்
2. கோஸ் – 100 கிராம்
3. கேரட் – 100 கிராம்
4. பீன்ஸ் – 100 கிராம்
5. வெங்காயம் – 2 எண்ணம்
6. குடை மிளகாய் – 1 எண்ணம்
7. அஜினோமோட்டோ – 1 தேக்கரண்டி
8. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
9. மிளகுத் தூள் – 3 தேக்கரண்டி
10. இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
11. முந்திரிப்பருப்பு – 4 எண்ணம்
12. மல்லித்தழை - சிறிது
13. எண்ணெய் – தேவையான அளவு
14. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
15. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. சாதத்தைப் பாதி வெந்த நிலையில் வடித்து ஆற வைத்துக் கொள்ளவும்.
2. கோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, அது பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும்.
4. அத்துடன் நறுக்கி வைத்துள்ள கோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய் என ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
5. பின்னர் அதில், அஜினமோட்டோ, சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
6. இந்தக் கலவையில் வடித்து வைத்திருக்கும் சாதத்தைக் கொட்டி நன்கு கிளறி விடவும்.
7. பின்னர் அதை மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
8. இறக்கிய பின்பு அதில் முந்திரிப்பருப்பு, மல்லித்தழை தூவி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.