கத்தரிக்காய் சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் (பிஞ்சுக்காய்) - 300 கிராம்
2. அரிசி - 250 கிராம்
3. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
4. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
5. மல்லித் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
6. மஞ்சள் தூள் - சிறிது
7. கடுகு - 1 தேக்கரண்டி
8. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
9. கடலைப்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
10. நல்லெண்ணெய் - 200 மில்லி
11. உப்பு - தேவையான அளவு
12. கறிவேப்பிலை - சிறிது
13. மல்லித்தழை - சிறிது
செய்முறை :
1. அரிசியைக் குழைந்து விடாமல் சாதமாக வடித்து வைக்கவும்.
2. கத்தரிக்காயை நீளவாக்கில் பொடியாக வெட்டி வைக்கவும்.
3. வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழையைச் சிறிதாக வெட்டி வைக்கவும்.
4. கடலைப்பருப்பு, உளுந்து, மல்லி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுத்து அரைத்து வைக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
6. தாளிசத்துடன் நறுக்கி வைத்த வெங்காயம், கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும்.
7. கத்தரிக்காய் நன்கு வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து இலேசாக தண்ணீர் விட்டுக் கிளறி சில நிமிடங்கள் மூடி வைக்கவும்.
8. பின்னர் அதைக் கிளறி இறக்கவும்.
9. இந்த கலவையில், சாதம், அரைத்து வைத்துள்ள கலவையையும் சிறிது, சிறிதாகப் போட்டுக் கிளறவும்.
10. பின்னர் மீதமிருக்கும் எண்ணெயை கலவைச் சாதத்தில் ஊற்றிக் கிளறவும்.
11. சாதத்தின் மேலாக நறுக்கி வைத்த மல்லித்தழையினைத் தூவவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.