பூண்டு சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வடித்த சாதம் – 1 கப்
2. பூண்டு – 10 பல்
3. வெங்காயம் – 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
5. சீரகம் – 1/4 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை – சிறிது
7. நெய் – 1 மேசைக்கரண்டி
8. உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
1. வெங்காயத்தைப் பொடியாகவும், பச்சை மிளகாயை நீளவாக்கிலும் நறுக்கி வைக்கவும்.
2. பூண்டை விழுதாக அரைத்து வைக்கவும்.
3. ஒரு கடாயில் நெய் விட்டுக் காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், அரைத்த பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும்.
5. அது நன்கு வதங்கியவுடன் அதில் சாதத்தை போட்டுக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: தயிர்ப் பச்சடி அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.