மிளகுப் பொங்கல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 கிண்ணம்.
2. பாசிப்பருப்பு - 1/4 கிண்ணம்.
3. மிளகு - 1 தேக்கரணடி.
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி.
5. எண்ணெய், நெய் - 2 மேசைக்கரண்டி.
6. பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை.
7. உப்பு - தேவையான அளவு.
8. உலர் திராட்சை - 5 எண்ணம்.
8. முந்திரிப் பருப்பு - 5 எண்ணம்.
செய்முறை :
1. பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பை ஒன்றாக கலந்து கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் காய்ந்ததும் மிளகு, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.
3. பெருங்காயத் தூள் சேர்க்கவும். உலர் திராட்சை, முந்திரிப்பருப்பைச் சேர்த்துக் கொள்ளவும்.
4. இந்தக் கலவையை அரிசி மற்றும் பாசிப் பருப்புடன் கலந்து கொள்ளவும்.
5. ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் (4 கிண்ணம் அளவு) வைத்து உப்பு கலந்து கொதிக்க விடவும்.
6. இலேசாக கொதி வந்தவுடன் அரிசி, பாசிப்பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறி விடவும்.
7. மிதமான நெருப்பில் பொங்கல் வெந்ததும் இறக்கி விடலாம்.
குறிப்பு:
பொங்கல் குளைவாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சிறிது தண்ணீரைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.