1. பச்சரிசி - 2 கப்
2. பெரிய வெங்காயம் -1 எண்ணம்
3. கோவைக்காய் - 100 கிராம்
4. தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
6. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. உளுந்து - 1/2 தேக்கரண்டி
9. கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
1. வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
2. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
3. அதில் வெங்காயம், தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. அத்துடன் கோவைக்காய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கவும்.
5. எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கிளறி, அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அரிசியைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் பத்து நிமிடம் வரை குறைவான நெருப்பில் வைத்துப் பின் இறக்கவும்.
6. பத்து நிமிடம் கழித்துக் குக்கரை திறந்து ஒரு கிளறு கிளறிச் சூடாகப் பரிமாறவும்.<./div>
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.