1. சாதம் (உதிரியாக வடித்தது) - 2 கப்
2. இஞ்சி (தோல் நீக்கிப் பொடியாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி
3. புளி - எலுமிச்சை அளவு
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
8. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
9. நல்லெண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
11. கறிவேப்பிலை - சிறிது
12. தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
13. மல்லித்தழை - தேவையான அளவு
1. இஞ்சி, புளி, மஞ்சள் தூள், மிளகாய் வற்றல், உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பும் கறிவேப்பிலைபோட்டுத் தாளிக்கவும்.
3. அரைத்து வைத்த விழுதைத் தாளிசத்துடன் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரியும் வரைக் கிளறவும்.
4. பின்பு அதனுடன் சாதம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
5. தேங்காய்த்துருவல், மல்லித்தழையைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.<./div>
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.