1. வரகரிசி - 1 கப்
2. பயத்தம் பருப்பு - 1/2 கப்
3. பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
4. இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
5. உப்பு - தேவையான அளவு
6. நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து - 1/4 கப்
7. கடுகு - 1 சிட்டிகை
8. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
9. முந்திரி - 8 எண்ணம்
10. சீரகம் - 1/4 தேக்கரண்டி
11. மிளகு - 1/2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது
1. முதலில் வெறும் கடாயில் பயத்தம் பருப்பை இலேசாகச் சிவக்கும் வரை வறுக்கவும்.
2. அடுப்பை அணைத்து, அந்தச் சூட்டில் வரகரிசியைப் போட்டு வறுக்கவும்.
3. அதை இருமுறை கழுவி நான்கு தண்ணீர் சேர்த்துக் குக்கரில் ஆறு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
4. வாணலியில் நெய்யும் எண்ணெயும் சேர்த்துச் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளித்துப் பொங்கலைச் சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்துக் கிளறவும்.
குறிப்பு:
1. சூடான கொத்சு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
2. நான்கு மிளகைச் சிறிது பொடித்துச் சேர்த்தால் மணமும் காரமும் கூடும்.
3. குக்கரில் நேரடியாக வைப்பதை விட ஒரு பாத்திரத்தில் பொங்கலை வேக வைத்தால் அடிப் பிடிப்பதைத் தவிர்க்கலாம்.<./div>
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.