மல்லிச் சட்னி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மல்லித்தழை - 1 கட்டு.
2. இஞ்சி - 1 துண்டு.
3. பூண்டு - 1 பல்.
4. பச்சைமிளகாய் - 2 எண்ணம்.
5. சின்ன வெங்காயம் - 2 எண்ணம்.
6. புளி - சிறிது.
7. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி.
8. கடுகு - 1/2 தேக்கரண்டி.
9. சமையல்எண்ணெய் - 1 தேக்கரண்டி.
10. உப்பு - தேவையான அளவு.
11. கருவேப்பில்லை - சிறிது.
செய்முறை:
1. வாணலியை அடுப்பில் வைத்துச் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்றவைகளைப் போட்டு வதக்கவும்.
2. இத்துடன் மல்லித்தழை, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும்.
3. வதக்கியவற்றை சிறிது நேரம் ஆற வைக்கவும்.
4. வதக்கிய கலவை ஆறிய பிறகுப் புளியுடன் தேவைக்கற்றவாறு தண்ணீர் சேர்த்து பசை போல் அரைக்கவும்.
5. வாணலியில் எண்ணையை ஊற்றிச் சிறிது நேரம் சூடாகியவுடன், கடுகைப் போட்டு வெடித்ததும் கருவேபில்லையை சேர்த்துத் தாளிக்கவும்.
6. அதன் பின்னர் அரைத்த கலைவையை அதில் ஊற்றி ஒரு முறை கொத்திக்க விடவும்.
குறிப்பு:
மல்லித்தழை வாடாமல் பச்சையாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.