வெங்காயக் காரச்சட்னி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
4. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
5. மல்லித்தழை - சிறிது
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடானதும், அதில் மிளகாய் வத்தலைப் போட்டு வறுத்துத் தனியே வைக்கவும்.
3. அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றிச் சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிச் சிறிது நேரம் ஆற விடவும்.
5. வதக்கியது ஆறிய பிறகு, அதனுடன் வறுத்த மிளகாய் வத்தல், மல்லித்தழை, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.