தேங்காய் தக்காளி சட்னி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. துருவிய தேங்காய் – 1/2 கப்
2. தக்காளி – 2 எண்ணம்
3. வெங்காயம் – 1 எண்ணம்
4. கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
5. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
6. கடுகு – 1 தேக்கரண்டி
7. இஞ்சி – 1 துண்டு
8. பூண்டு – 3 பல்
9. மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
10. கறிவேப்பிலை – சிறிது
11. எண்ணெய் – தேவையான அளவு
12. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடலைப் பருப்பு சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
2. பின் அதில் இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் துருவி வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து, வதக்கியவற்றை ஆற விடவும்.
5. நன்கு ஆறியதும் அதனை மிக்சியில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
6. பின் கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
7. அரைத்து வைத்துள்ள சட்னியில் தாளிசத்தைச் சேர்த்துப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.