தக்காளிச் சட்னி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தக்காளிப் பழம்- 200 கிராம்
2. பல்லாரி வெங்காயம் - 100 கிராம்
3. வெள்ளைப் பூண்டு - 15 கிராம்
4. இஞ்சி - சிறிது
5. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.தக்காளிப்பழம், பல்லாரி வெங்காயம் வெள்ளைப் பூண்டு, இஞ்சி அனைத்தயும் சேர்த்து 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்யில் வதக்கி எடுக்கவும்.
2. வதக்கப்பட்ட அனைத்தையும் சேர்த்து ஆட்டவும்.
3. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு தாளிக்கவும்.
3. அரைத்து வைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அந்த தாளிசத்தில் ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.