காளிப்ளவர் சட்னி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. காளிப்ளவர் - 250 கிராம்
2. தேங்காய் - பாதியளவு
3. இஞ்சி - சிறிது
4. சோம்பு - 1 தேக்கரண்டி
5. கசகசா - 1 மேஜைக் கரண்டி
6. கிராம்பு - 1 எண்ணம்
7. பட்டை - சிறிது
8. சிறிய வெங்காயம் - 100 கிராம்
9. தக்காளி - 50 கிராம்
10. ஏலக்காய் - 1
11. மிளகாய் - 6 எண்ணம்
12. பூடு - 5 பல்
13. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
14. உப்பு - தேவையான அளவு
15. நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. காளிப்ளவரை சிறுசிறு தூண்டுகளாக வெட்டி சிரிது கொதிக்க வைத்த நீரில் போடவும்.(இப்போது காளிபிளவரில் புழுக்கள் இருந்தால் தனியே வெளியேறி இறந்து விடும்)
2. இஞ்சி, புடு, ஏலக்காய், சோம்பு, கிராம்பு, மிளகாய், கசகசா, தேங்காய் அனைத்தையும் ஒன்றாய்ச் சேர்த்து அரைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, காளிப்ளவர் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
4. பின் அரைத்த மசாலவை ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விட்டுப் பின் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.