கத்தரிக்காய் கோஸ் மல்லி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் - 1/2 கிலோ
2. உருளைக் கிழங்கு - 1 எண்ணம்
3. சிறிய வெங்காயம் - 1/4 கிலோ
4. மிளகாய் - 6 எண்ணம்
5. புளி - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
7. கடுகு - 1 தேக்கரண்டி
8. நல்லெண்ணெய் - சிறிது.
செய்முறை:
1. வாணலியில் 600 மிலி. தண்ணீர் ஊற்றி கத்தரிக்காய், உருளைக் கிழங்கை முழுதாகப் போட்டு வேகவிடவும். நன்றாக வெந்ததும் தோல் நீக்கி மசித்து வைக்கவும்.
2. புளியை 150 மி.லி தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு போட்டு தாளிசம் செய்து, அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. பின்னர், அதில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் மசித்து வைத்த கத்தரிக்காய், உருளைக் கிழங்கைச் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து வந்ததும் இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.