மணத்தக்காளிக் கீரைத் துவையல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மணத்தக்காளிக் கீரை – 2 கப்
2. உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
3. கடலைப் பருப்பு – 1 மேசைக்கரண்டி
4. மிளகாய் வற்றல் – 6 எண்ணம்
5. புளி – சிறு நெல்லிக்காயளவு
6. உப்பு – தேவையான அளவு
7. நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. கீரையை நன்றாகக் கழுவி சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
2. பின்னர் மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மூன்றையும் சிறிது நல்லெண்ணெயில் வறுத்து எடுக்கவும்.
3. வறுத்த பொருட்களுடன் வதக்கிய கீரை, ஊற வைத்த புளி, உப்பு சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும்.
குறிப்பு:இத்துவையல் வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை குணமடைய உதவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.