பிரண்டை எள் துவையல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பிரண்டை (நறுக்கியது) - 1 கப்
2. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
3. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
4. கருப்பு எள் - 1 தேக்கரண்டி
5. பெருங்காயம் - 1 தேக்கரண்டி
6. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
7. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகாய் வற்றல், எள், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
2. பின்னர் பிரண்டைத் துண்டுகளை, அதன் பச்சை நிறம் மாறும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
3. வதக்கிய பிரண்டை, வறுத்து ஆற வைத்த பொருட்கள் ஆகியவற்றுடன் உப்பு, புளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.