காய் வற்றல்கள்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தேவையான காய் - 1 கிலோ (கத்தரிக்காய், கோவக்காய், பாகற்காய், வெண்டைக்காய், சீனிஅவரைக்காய் என்று எதுவாகவும் இருக்கலாம்)
2. உப்பு - தேவைக்கேற்ப
3. சாதம் வடித்த நீர் அல்லது புளிப்பில்லாத மோர் - தேவையான அளவு
செய்முறை:
1.தேர்வு செய்த காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2. சாதம் வடித்த நீர் அல்லது புளிப்பில்லாத மோரில் வெட்டி வைத்த காயை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
3. நன்றாக ஊறிய காய்த்துண்டுகளை வெயிலில் காயப் போடவும்.
4. ஈரப்பதமில்லாமல் இருக்கும் வரை காய வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.