வத்தக் குழம்புப் பொடி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்
2. மல்லி - 2 மேசைக்கரண்டி
3. கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
4. துவரம் பருப்பு - 4 தேக்கரண்டி
5. மிளகு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் மிளகாய் வற்றல், மல்லி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றைத் தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து ஆறியவுடன் நன்றாகப் பொடித்து எடுக்கவும்.
குறிப்பு:
மேற்கூறிய அளவிற்கு 5 நபர்களுக்குத் தேவையான குழம்பு தயாரிக்கலாம்.
குழம்பு செய்முறை
1. எலுமிச்சம் அளவு புளியை ஊற வைத்துக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
2. அதில் மேற்காணும் வத்தக் குழம்புப் பொடியைச் சேர்த்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
3. அத்துடன் கடுகு, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை, நல்லெண்ணையில் தாளித்துக் கொண்டால் சுவையான வத்தக் குழம்பு தயார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.